Wednesday, May 10, 2023

குறுந்தொகை 95 - நீரோரன்ன சாயல்

குறிஞ்சி - தலைவன் கூற்று

மால் வரை இழி தரும் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

-கபிலர்

மால் - பெரிய. வரை - மலை. இழிதல் - விழுதல். கல்முகை - பாறைப்பிளவு. ததும்பும் - ஒலிக்கும். குறவன் - குறிஞ்சி நிலத் தலைவன். குறுமகள் - சிறுபெண். சாயல் - மென்மை. உரன்  - வலிமை .

மாமலையில் விழும் தூய வெண்ணிற அருவி
பாறைகளில் மோதி ஒலிக்கும்
பலவித மலர்கள் பூத்த மலைச்சாரல் சிற்றூர்.
அவ்வூர்த் தலைவனின்,
அழகிய தோள்கள் கொண்ட
சிறுபெண்ணின்
நீர் போன்ற மென்மை,
தீ போன்ற
என் மன வலிமையை அழித்தது.

 

No comments:

Post a Comment