மருதம் - தோழி கூற்று
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூரரமகளிரோடு உற்ற சூளே.
-கோப்பெருஞ்சோழன்
அணங்குதல் - வருந்துதல். மகிழ்நன் - மருத நிலத் தலைவன். முன்றில் - முற்றம். நனை - அரும்பு. புன்கு - புன்க மரம். வேலன் - வெறியாடுபவன் (பூசாரி). வான் - வெண்மை. எக்கர் - மணல்மேடு. துறை – நீர்த்துறை. இறை - வளையல். சூரர மகளிர் - தெய்வமகளிர். சூள் - சத்தியம்.
தலைவியைத் திருமணம் செய்வதாய் சத்தியம் விட்டு, செய்யாமல் காலம் தாழ்த்திய தலைவனுக்குத் தோழி சொன்னது.
எம்மை வருத்துகின்றன, தலைவனே!
முற்றத்தில் வளர்ந்த
அரும்புகள் முதிர்ந்த புன்னை மரத்தின் மலர்கள்,
பூசாரி அலங்கரித்து அமைத்த வெறியாடும் களத்தில்
செந்நெல்லின் வெண் பொரி சிதறிக் கிடப்பது போல,
வெண் மணல் மேடுகள் மேல் பரவி இருக்கும்
எங்கள் ஊர் நீர்த்துறையில்,
இவளது வளையல் அணிந்த முன்கையைப் பற்றி
பெண் தெய்வங்கள் சாட்சியாக
நீ செய்த சத்தியங்கள்.
செந்நெல் வான் பொரி - வெறியாட்டின் ஒரு பகுதியாக, செந்நெல் பொரியை பூசாரி வானத்தில் வீசுவார். இதை தெய்வம் உண்ணும் என்று நம்பிக்கை. இந்த எரி சோறு மரபு தற்போதும் எல்லைத் தெய்வ வழிபாட்டில் உள்ளது.

No comments:
Post a Comment