குறிஞ்சி - தலைவன் கூற்று
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குல் குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலோடு எமக்கே.
-பரூஉ மோவாய்ப் பதுமனார்.
புத்தேள் நாடு - தேவருலகம். சீர் தூக்குதல் - ஒப்பிட்டுப் பார்த்தல்.
சாலாவே - ஒப்பாகாது. உண்கண் - மை தீட்டிய கண். வரி - தேமல். அல்குல் - இடை. மாறுபடுதல்
- தழுவுதல். வைகல் - நாள்.
விரிந்த அலைகடல் சூழ்ந்த நிலஉலகம்
பெறுதற்கரிய தேவருலகம்
ஆகிய இரண்டும்
சீர் தூக்கிப் பார்த்தால், ஒப்பாக மாட்டா.
பூப்போன்ற, மைதீட்டிய கண்கள்
பொன் போன்ற மேனி
அழகிய தேமல் படர்ந்த இடை கொண்ட
அச்சிறு பெண்ணுடன்
தோள் சேர்ந்து தழுவும் நாளில்
(பெறும் இன்பத்தோடு ஒப்பிடின்)
எமக்கே.

No comments:
Post a Comment