Wednesday, May 3, 2023

குறுந்தொகை 6 - யான் மன்ற துஞ்சாதேனே

நெய்தல் - தலைவி கூற்று

நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
 
-பதுமனார்
 
யாமம் - நடுச் சாமம். முனிவு - வருத்தம். இன்று – இல்லாமல். நனந்தலை - பரந்த இடம். துஞ்சுதல் – தூங்குதல். மன்ற – உறுதியாக.
 
தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி சொன்னது.
 
நள்ளென்ற நடுச் சாமம்.
சொல் ஓய்ந்து
இனிது அடங்கினர் மக்கள்.
துயரம் இன்றி
பரந்த உலகமும் தூங்குகிறது.
நான் மட்டும் உறங்கவில்லை.

No comments:

Post a Comment