குறிஞ்சி - தலைவி கூற்று
யாரும் இல்லைத் தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத் தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே.
-கபிலர்
தினை - ஒரு சிறு தானியம். தாள் – அடிப்பாகம். ஆரல் - ஒரு மீன். குருகு – நாரை. மணத்தல் - புணர்தல். ஞான்று - பொழுது.
திருமணம் செய்வதாக வாக்குறுதி தந்து, தலைவியைக் கூடிய தலைவன், பின்னர் காணாமல் போய்விட, தலைவி வருந்திச் சொன்னது.
வேறு யாரும் இல்லை.
அந்தக் கள்வன் மட்டுமே இருந்தான்.
அவன் செய்த சத்தியங்கள் பொய்த்தால்
நான் என்ன செய்வேன்!
தினையின் அடிப்பாகம் போன்ற
சிறிய பசுங் கால்கள் கொண்ட,
ஓடும் நீரில் ஆரல் மீனுக்காகக் காத்திருக்கும்
நாரையும் இருந்தது.
அவன் என்னைக் கூடிய போது.

No comments:
Post a Comment