குறிஞ்சி - தலைவன் கூற்று
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே.
-மள்ளனார்
அலமருதல் - சுழலுதல். ஏ - அம்பு. பரீஇ - பருத்தி.
வித்திய -விதைத்த. ஏனல் - தோட்டம். குரீஇ - குருவி.
ஓப்புதல் - ஓட்டுதல். மழை – குளிர்ச்சி.
பூப்போன்று அழகு கொண்டன.
சுற்றிச் சுழல்வன.
அம்பு போல் தாக்கி
எல்லாரும் அறிய என்னை நோய் செய்தன.
தேன் மொழி பேசும்
திரண்ட மென் தோள்கள் கொண்ட,
மலையில் பருத்தி விதைக்கப்பட்ட தோட்டத்தில்
குருவி ஓட்டுபவளின்
குளிர்க் கண்கள்.
Saturday, May 6, 2023
குறுந்தொகை 72 - பெருமழைக் கண்ணே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment