மருதம் - தலைவி கூற்று
நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட்டி யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே.
-படுமரத்து மோசிகீரனார்
நசை - விருப்பம். கோடு - தந்தம்.
தன்னைப் பிரிந்திருந்த தலைவன், திரும்பி வருகிறான் என்ற செய்தியைக் கொண்டு வந்த பாணனிடன், தலைவி சொன்னது.
நீ கண்டாயா?
கண்டவர் சொல்லிக் கேட்டாயா?
தெளிவாக அறிய ஆசைப்படுகிறேன். சொல்.
வெண்தந்த யானைகள்
சோணை நதியில் குளிக்கும்
பொன்மலிந்த பாடலி நகரைப் பெறுவாயாக!
பாணனே, சொல்.
யார்சொல்லிக் கேட்டாய்?
காதலர் வரவை.
சோணை - கங்கையின் கிளை நதி (Sone). பாடலி - மகத நாட்டுத் தலைநகரான பாடலிபுத்திரம்.
Saturday, May 6, 2023
குறுந்தொகை 75 - சோணைக்கரைப் பாடலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment